பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

முப்பத்தி நான்காம் அத்தியாயம் கொட்டியது போர் முரசு

ஜவஹர் சிறை சென்ற இரண்டாம் நாள், மகாத்மா காந் தி பம்பாய் துறைமுகத்திலே வந்து இறங்கினார். நிலைமையை அறிந்தார். உடனே வைசிராயிக்குத் தந்தி கொடுத்தார். எதற்கு? நேரில் பேசுவதற்கு.

வில்லிங்க்டன் என்ன செய்தார் ? நிபந்தனை விதித்தார். "அவசரச் சட்டம் பற்றி ஏதும் பேசக் கூடாது. வேறு ஏதாவது பேசவேண்டுமானால் பேசுவோம். வருக !” என்றார்.

" பேசுவதற்கு வேறென்ன இருக்கிறது ? எதுவும் இல்லை !" என்று கூறிவிட்டார் காந்தி.

இனி என்ன ? மீண்டும் போர், போர், சத்தியாக்கிரக போர்முரசு கொட்டவேண்டியது தான். வேறு வழியே இல்லை.

எனவே பம்பாயில் கூடியது காங்கிரஸ் காரியச் கமிட்டி, சத்தியாக்கிரகம் பற்றி தீர்மானித்தது.

"போரைத் தொடர்ந்து நடத்துங்கள் ' என்று அறிவித்தது.

காங்கிரஸ் கமிட்டிகள் இத்தகைய போர் அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை. சமாதானப் பேச்சு நடைபெறும் என்றே எண்ணியிருந்தன.

ஆனால், வி ல் லி ங் க் டன் தான் வலுச்சண்டைக்கு அழைக்கிறாரே! பின் போர் தொடங்க தயக்கம் ஏன் ? எனவே காங்கிரஸ் கொட்டியது போர் முரசு. இரகசிய சுற்றறிக்கைகள் நாடு முழுவதும் பறந்தன. அகிம்சா வீரர்கள் போருக்குப் புறப்பட்டார்கள்.