பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

முப்பத்தி ஐந்தாம் அத்தியாயம்

1932 நிகழ்ச்சிகள்

1932ஆம் ஆண்டு ஜனவரி 4ந் தேதி விடியற்காலை. காந்தியைக் கைது செய்தது அரசாங்கம். ராஷ்டிரபதி வல்லபாய் பட்டேலையும் கைது செய்தது - சிறைக்குக் கொண்டு சென்றது.

பின் என்ன? மளமளவென்று அசுர வேகத்தில் அவசரச் சட்டங்களை அள்ளி வீசினார் வில்லிங்க்டன்.

  • காங்கிரஸ் சட்ட விரோதமானது. காங்கிரசோடு ஒட்டிய ஸ்தாபனங்கள் எல்லாம் சட்ட விரோதமானவை '’ என்று அறிவிக்கப்பட்டன.

காங்கிரஸ்காரருக்கு இடம் கொடுத்தால் தண்டனை ! தண்ணிர் கொடுத்தால் தண்டனை காங்கிரஸ்காரருடன் பேசினால் தண்டனை ! இப்படி தண்டனை ஜாபிதாக்களைச் பிரசுரித்து - தினமும் தண்டனை பட்டியலை பெறுக்கிக் கொண்டே வந்தார் வைசிராய்.

அல்காபாத்திலே காங்கிரஸ் தலைமைக் காரியாலயம் ஆகிய சுயராஜ்ய பவனம் சீல் வைக்கப்பட்டது. காங்கிரஸ் கொடி கீழே இறக்கப்பட்டது. சுயராஜ்ய பவனத்திலே இருந்த காங்கிரஸ் ஆஸ்பத்திரி சாமான்களை எல்லாம் தூக்கி வெளியே எறிந்தார்கள்.

மறியல் செய்தால் தண்டனை மறியல் செய்யத் தூண்டினால் தண்டனை! சத்தியாக்கிரகம் செய்யச் சொன்னால் தண்டனை. பத்திரிகைகளுக்கு வாய்பூட்டு ! காங்கிரசைப் பற்றிய செய்திகளைத் வெளியிடக்கூடாது.