பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

திடீரென அவர்கள் முன்னே தன்னந்தனியாக வந்து நின்றது குதிரை. சவாரிக்குச் சென்ற ஜவஹர் எங்கே ? எங்கே ? வந்தவர் அனைவரும் ஒவ்வொரு பக்கம் சிறுவனைத் தேடிப் பறந்தனர். ஜவஹர் கிடைத்தார். எப்படி ? வழியிலே !

அங்கிருந்து மெல்ல நடந்து வந்துக் கொண்டிருந்தார். பழக்கப்படாத அந்தக் குதிரை முரட்டுத்தனமாக ஜவஹரை கீழே தள்ளிவிட்டு, தனியே வீடு வந்து சேர்ந்துவிட்டிருந்தது.

ஜவஹரைக் கண்டவுடன் அனைவரும் மகிழ்ந்தனர். அவரை வெற்றி வீரனாக தூக்கி வந்தனர்.

웃 >k 를

இம்மாதிரி ஆபத்திலே அவர் சிக்கியது இது ஒரே ஒரு முறை அல்ல. இதேபோல் அவருக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இன்னும் சிலவுண்டு.

1909-ம் ஆண்டிலே இங்கிலாந்தில் படித்துக் கொண்டு இருந்தபோது ஐரோப்பா சென்றார். அப்போது நாடு சுற்றுவதற்காக நார்வேக்குச் சென்றார். இவருடன் ஆங்கிலேய சகா ஒருவரும் சென்றார். இருவரும் நார்வேயின் மலைச் சரிவுகளிலே சுற்றித் திரிந்து விட்டு ஹோட்டலுக்குப் போனார்கள். குளிப்பதற்கு வெந்நீர் கேட்டார்கள்.

"குளிப்பதா ? அந்த வழக்கமே இங்கு கிடையாதே."

"பின் என்ன செய்வது ? உடம்பு அழுக்காயிருக்கிறது,'

"சிறிது தூரத்திலே சிற்றாறு ஒன்று ஓடுகிறது. அங்கே போய் வேண்டுமானால் குளிக்கலாம்.”