பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

| 12

நாட்டிலே பிரசாரம் செய்ய வேண்டுமென்று கூறினார். அலகாபாத்துக்குத் திரும்பினார். குடும்பக் காரியங்களைக் கவனித்தார்.

மோதிலால் நேரு இருந்த போது ஏராளமாகச் சம்பாதித்தார். செலவு செய்தார், அவர் இறந்த பிறகு ? வருமானம் ஏது? செலவுக்கு என்ன செய்வது? அப்பா சம்பாதித்த சொத்தில் இருந்து எடுத்து செலவு செய்தார் ஜவஹர். அது எவ்வளவு நாளைக்கு வரும் ? கொஞ்சங் கொஞ்சமாக எல்லாம் கரைந்தன. அப்புறம் என்ன செய்வது? சிக்கனத்தில் கருத்து செலுத்தினார் ஜவஹர். மோதிலால் நேரு இருந்த காலத்திலே எக்காட்சி வழங்கியது ஆனந்தபவனம் ? ஆடம்பரக் காட்சியே வழங்கியது. அக்காட்சியைச் சிறிது சிறிதாகக் குறைத்து விட்டார். ஜவஹர்; அறவே ஒழித்து விட்டார்.

செலவு இனங்களைச் சுருக்கினார். வேண்டாத பொருள்களை எல்லாம் விற்றுவிட்டார். கமலாவிடம் ஏராளமான நகைகள் இருந்தன. அவற்றை எல்லாம் விற்று விட எண்ணினார் ஜவஹர்.

"உனது நகைகளை விற்று விட்டால் என்ன?’ என்று கேட்டார்.

“எதற்காக விற்க வேண்டும்? இருக்கட்டுமே?” என்றார் & ᎥᏝ6afᎢ .

‘'நீ தான் அவற்றை அணிவதில்லை, அப்புறம் எதற்கு?’ என்றார் ஜவஹர்.

' குழந்தை இந்திராவுக்கு அணிவேன்” என்றார் கமலா.

" அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது விற்றுவிடுவோம் ' என்றார் ஜவஹர்.