பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113

" சரி; உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்” என்று கூறி விட்டார் மலா.

நகைகளை எல்லாம் விற்றுவிட்டார் ஜவஹர். இவ்வளவும் எதற்காகச் செய்தார் ?

அன்னை ஸ்வருபராணி நேருவுக்காக, அரசி போல் வாழ்ந்த அவர் பணம் இல்லையே என்று கவலைப்படக் கூடாது என்பதற்காக, தள்ளாத வயதில் செலவுக்கு சங்கடப் படலாகாது என்பதற்காக.

எல்லாம் தாய்க்காக.

நாற்பத்தி ஒன்றாம் அத்தியாயம் தள்ளு ஜவஹரை சிறையில் !

1934-th ஆண்டு.

பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மா இருக்குமா? எப்படி இருக்கும் ? ஜவஹரைக் கண்காணித்துக் கொண்டே இருந்தது. மறுபடியும் சி ைற யி ல் தள்ளுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது.

இது ஜவஹருக்கும் தெரியும். எனவே அவர் என்ன செய்தார் ? கவனிக்க வேண்டிய காரியங்களை எல்லாம் விரைவாக கவனித்தார். கல்கத்தா சென்று கமலாவின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் ஆலோசிக்க எண்ணினார். கல்கத்தாவுக்குச் சென்றார். மூன்று நாள் அங்கே தங்கினார், வைத்தியர்களைக் கலந்து ஆலோசித்தார் ; நண்பர்களைக் கண்டு பேசினார் ; பொதுக்கூட்டங்களில் பேசினார். புறப்பட்டார் அலகாபாத்துக்கு.

14