பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6

“சரி” என்று கூறிவிட்டு இருவரும் அந்த ஆற்றுக்குப் போனார்கள்.

உறை பனி மீது கால் வைத்து வழுக்கி விழுந்தார் ஜவஹர். சிலீர் என்றது. வேகமாக ஒடிய அந்தப் பெரு வெள்ளம் அவரை வேகமாக இழுத்துச் சென்றது. குளிரினால் ஜவஹரின் உடல் மரத்து, விறைத்தது. நல்ல வேளை. நண்பர் கரையோரம் போனார். ஜவஹரின் காலைப் பற்றி மெதுவாக இழுத்து கரை சேர்த்தரர்.

இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் என்ன நிகழ்ந்து

இருக்கும் ? பேராபத்து விளைந்திருக்கும். செங்குத்தான நீர்வீழ்ச்சி ஆங்கிருந்தது, அதிலே சிக்கியிருப்பார் ஜவஹர்.

நல்ல காலம். பாரதத்தின் அதிர்ஷ்டம் ! ஜவஹர் தப்பினார் ; இல்லை. காக்கப்பட்டார்.

-- 本 x:

1916-ஆம் ஆண்டு. வசந்த பஞ்சமி தினத்திலே ஜவஹருக்குக் கல்யாணம் டில்லியிலே நடைபெற்றது. டில்லியிலே ஒரு புதிய நகரையே அமைத்து விட்டார் மோதிலால் நேரு, அலகாபாத்திலிருந்து தனி இரயிலில் ஏராளமான நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்துச் சென்றார். நேரு கலியாண முகாம் என்று அந்தப் புது நகருக்கு பெயரும் கொடுக்கப்பட்டது. ஒரே குதுாகலம். மணப்பெண் கமலா, கெளவுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கலியாணம் முடிந்த பிறகு ஜவஹர் தமது குடும்பத்துடன் காஷ்மீருக்குச் சென்றார். குடும்பத்தினரை ஓரிடத்தில் தங்கச் செய்து விட்டு, மலைச் சரிவுகளிலே சுற்றித் திரியத் தொடங்கினார் ஜவஹர்.

லதக் பிரதேசத்துக்குச் சென்றார். ஹோஜிலா கணவாயைத் தாண்டிச் சென்றார். அமரநாத் குகையைப்