பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115

  • வாருங்கள் ! உங்களைத் தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஜவஹர்.

கமலா உள்ளே சென்றார், ஜவஹருக்கு வேண்டிய சாமான்களைத் தயாராக எடுத்து வைப்பதற்காக, சிறிது நேசத்தில் ஜவஹரும் உள்ளே சென்றார். ஜவஹரைக் கண்டதும் கமலா என்ன செய்தார் ? கட்டிக் கொண்டார்; மயங்கி விழுந்தார்.

கமலாவைத் து க் கி ன ர் ஜவஹர். மயக்கம் தெளிவித்தார். ஆறுதல் கூறினார். விடைபெற்றார். புறப்பட்டார். -

ஜவஹரை ஏற்றிக்கொண்டு சென்றது போலீஸ் வேன்.

நாற்பத்தி இரண்டாம் அத்தியாயம்

இருண்ட சூழ்நிலை இடையே சிறு ஒளி

அலிப்பூர் சிறையிலே ஓர் அறை. நீளம் பத்து அடி, அகலம் ஒன்பது அடி. இந்த அறையிலே இருந்தார் ஜவஹர். தெருவிலே ஒடும் டிராம் வண்டிகளின் சப்தம் வந்து காதிலே விழும். தேநீர்க் கடைகளிலே ஓலமிடும் கிராமப்போன் சங்கீதம் வந்து காதைத் துளைக்கும். தெருவிலே போவாரும் வருவாரும் சள சள என்று பேசும் குரல் சிறிது கேட்கும்.

இவ்வளவும் போதாவென்று மற்றொன்றும் சூழும். அது என்ன ? புகை, புகை, அடுப்பங்கரை புகை.