பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118

ஐரோப்பிய வானிலே போர் மேகங்கள் இடித்தன ; முழங்கின; மின்னல்கள் தெறித்தன ; குழப்பமும் பீதியும் மக்களைக் கவ்விக் கொண்டன.

இதே சமயம் தேசீய நிலை எப்படி ?

நேருவைப் பின்பற்றி பீகாருச்குச் சென்றார் காந்தி. பூகம்பத்தால் சேதமுற்ற பகுதிகளை எல்லாம் பார்த்தார். சர்க்காருடன் ஒத்துழைத்து நிவாரண வேலைகளைச் செய்யுமாறு காங்கிரஸ்காரர்களுக்குக் கூறினார்.

டில்லியிலே டாக்டர் அன்சாரி தலைமையிலே பூலபாய் தேசாய் போன்ற காங்கிரஸ்காரர்கள் கூடினார்கள்; சட்ட சபைக்குள் செல்ல வேண்டும் என்று பேசினார்கள். 1934-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலே மத்திய சட்டசபைத் தேர்தல் நடைபெற இருந்தது. அதிலே போட்டியிட வேண்டும் என்றார்கள்.

இக்கருத்துக்கு மகாத்மாவின் ஆசி பெற வேண்டி பீகாருக்குச் சென்றார்கள். காந்தியுடன் பேசினார்கள். ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டார் காந்தி. என்ன அறிக்கை ? சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டது என்ற அறிக்கை.

சிறையிலே இருந்த ஜவஹர் இவற்றை எல்லாம்

அறிந்தார். மனம் வருந்தினார்; துன்புற்றார் ; சோர்வு அடைந்தார்.