பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

நாற்பத்தி நான்காம் அத்தியாயம் நடப்பும் கனவும்

சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டதாக காந்தி அறிவித்த உடனே என்ன நிகழ்ந்தது? சர்க்காரும் தனது கெடுபிடியைச் சிறிது தளர்த்தியது.

காங்கிரஸ் ஸ்தாபனத்தின் மீது விக்திகப்பட்ட தடையை வாபஸ் பெற்றது. எல்லா மாகாணங்களிலும் அல்ல ; சில மகாணங்களில் தான். எல்லைப்புற மாகாணத்தில் தடை நீக்கப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. காங்கிரஸ் தலைவர்கள் வெளியே வந்தார்கள்; தொண்டர்களும் வெளியே வந்தார்கள். ஆனால் எல்லைப்புற மாகாணத்தில் மட்டும் நிலைமை வேறு. கான் சகோதரர்கள் விடுதலை பெறவில்லை. செஞ்சட்டை ஸ்தாபனத்தின் மீதிருந்த தடை நீக்கப் படவில்லை. இது குறித்து அரசாங்கத்தைப் பாராட்டினார் இந்து மகாசபைத் தலைவர் ஒருவர்.

சிறையிலே இருந்த ஜவஹர் இதை அறிந்தார். சீறினார். வகுப்பு வாதம் நாட்டை அரித்துத் தின்பது கண்டு வருந்தினார்; கலங்கினார்; துன்புற்றார்.

ஒரு நாள் இரவு தூங்கும் போது கனவு கண்டார். எல்லைப்புற காந்தி அப்துல் கபார்கான் தாக்கப்படுதல் போலவும் தாம் அவரைப் பாதுகாக்கப் போரிடுவது போலவும் கனவு.

விழித்தார் ஜவஹர்; எழுந்தார்; அவரது தலையணை கண்ணிரால் நனைக்கப்பட்டிருந்தது கண்டார்.