பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122

“உங்கள் மனைவிக்கு உடம்பு சுகமில்லை எனவே நீங்கள் சென்று பாருங்கள்; அருகில் இருங்கள். பதினொரு நாட்கள் இருக்கலாம். பன்னிரண்டாம் நாள் மீண்டும் சிறைக்கு வந்துவிட வேண்டும்' என்று கூறினார்கள் அதிகாரிகள்.

ஜவஹருக்கு விடுதலை அளித்தார்கள். பதினொரு நாள் விடுதலை,

நாற்பத்தி ஐந்தாம் அத்தியாயம்

தாயும் தாரமும்

ஆனந்த பவனத்துக்கு விரைந்து சென்றார் ஜவஹர். பவனம் எக்காட்சி வழங்கியது ? துன்பக் காட்சி வழங்கியது.

அரண்மனை போன்ற அம்மாளிகையின் ஓர் அறையிலே படுத்தவண்ணம் இருந்தார் ஸ்வரூபராணி நேரு , மோதிலால் நேருவின் மனைவி ; ஜவஹரின் தாய். முதுமையும் பிணியும் அவரை வாட்டின. கவலையும் ஏக்கமும் அவர்தம் உள்ளத்தை அரித்தன ; எரித்தன.

மற்றோர் அறையிலே படுத்திருந்தார் கமலா நேரு, நோய் அவரது உடலை அரித்து தின்றுவிட்டது. துரும்பு போல் இருந்தார்.

தாயைக் கண்டார் ஜவஹர் , தாரத்தையும் கண்டார்.

ஜவஹரின் வருகை இருவருக்கும் சிறந்த மருந்தாயிற்று. கமலா நேருவின் உடல் நிலை சிறிது குணம் கண்டது. அம்மாதிரியே ஸ்வருபராணியும் சிறிது மகிழ்ச்சியுடன் விளங்கினார். -