பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

123

பதினொரு நாட்கள் உருண்டோடி விட்டன. போலீஸ் வான்’ வந்துவிட்டது ஜவஹரை அழைத்துச் செல்ல.

போலீஸின் வருகை கண்டார் ஜவஹர். தமது சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டார் ; எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டார்; போலீஸ் வானில் புறப்பட்டார்.

செல்வக் குமானைப் பிரிய மனமின்றி வருந்தினார் ஸ்வருபராணி. படுக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தார், மகன் பின்னே,

கண்களில் நீர் ததும்பக் கைகளை அகல விரித்துக் கொண்டு ஓடி வந்தார் அவர். பெற்ற மனம் அல்லவா ? அக்காட்சி கண்டார் ஜவஹர் ; மனம் துடித்தார் ; வாடினார் ; வருந்தினார். நீண்ட நேரம் வரை அக்காட்சி அவரது மனத்திரையை விட்டு அகலவில்லை; நின்றுக் கொண்டே இருந்தது.

கமலாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி தினமும் டாக்டர்கள் அறிக்கை அனுப்பினார்கள். அந்த அறிக்கை ஜவஹரிடம் கொடுக்கப்பட்டது.

இரண்டு வாரம் தான் இவ்வாறு நடைபெற்றது. பிறகு அறிக்கை கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. p:

கமலாவின் உடல்நிலை குணமாகிவிட்டதா? இல்லை மோசமாகிக் கொண்டுதான் இருந்தது. எனினும் அரசாங்கம் அறிக்கை கொடுக்க விரும்பவில்லை. எனவே அறிக்கை கொடுப்பதை நிறுத்தி விட்டது. அறிக்கை வராது போகவே கவலை அதிகமாயிற்று ஜவஹருக்கு. என்னவோ, ஏதோ என்று கலங்கினார் ; ஏங்கினார்.

"ஏன் இவ்வாறு கலங்கவேண்டும்? நோய்வாய்ப்பட்டு இருக்கும் மனைவியைப் பிரிந்து தவிக்கவேண்டும்? ஒரு