பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7

பார்க்க ஆசை கொண்டார். மானஸ்ரோவர் ஏரியைப் பார்க்க விரும்பினார். எனவே ஒரு சிறு கூட்டத்துடன் மலைச் சிகரங்களின் மீது ஏறினார். சுமார் 12 ஆயிரம் அடி உயரம் ஏறியிருப்பார். பனி சரிய ஆரம்பித்தது. அந்தச் சருக்கு பனி ஜவஹரை இழுத்துச் சென்றது. செங்குத்தான மலைச் சரிவிலிருந்து கீழே உருண்டிருக்க வேண்டும். நல்ல வேளை, அவர் இடுப்பிலே கட்டியிருந்த கயிற்றை தாங்கிப் பிடித்து ஜவஹரை மீட்டார்கள் உடன் சென்றவர்கள்.

அந்த கயிறு மாத்திரம் அவரைப் பிடித்து நிறுத்தி இராவிடில் என்ன ஆகியிருக்கும் ? அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பார் ஜவாஹர். பனி மேலே மூடியிருக்கும். ஆனால் நாட்டின் நல்ல காலம், ஜவஹர் காக்கப்பட்டார்.

x xk ×

இதே போல் தான் நடந்தது. 1926-ம் ஆண்டு மார்ச்சு மாதம். ஐரோப்பாவில் கமலா நேருக்கு வைத்திய சிகிச்சை அளிப்பதற்காக சுவிட்ஜர்லாந்து சென்றார். அவர், அவர் மனைவி கமலா நேரு, இந்திரா ஆகிய மூவருமே கப்பலில் புறப்பட்டனர்.

கமலா நேருவின் உடல் நிலை குணமாவதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதமாகும் என்று எண்ணினார் ஜவஹர். ஆனால் வெகு விரைவிலே உடல் நிலை குணமாகிவிட்டது. பெரிதும் மன சாந்தி அடைந்தார் நேரு. மகிழ்ச்சியாக பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாடுகளுக்கெல்லாம் சென்றார் ஜவஹர். அந்த நாடுகளின் நிலைமை அறிந்தார். பலரைச் சந்தித்தார் ; விவாதித்தார்.

சுவிட்ஜர்லாந்தின் இயற்கை வனப்பு அவரை பெரிதும் ஈர்த்தது. "ஸ்கேடிங்' என்ற பனிச் சறுக்கு விளையாட்டிலே கலந்து கொண்டார். -