பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127

கோபம் கொண்டார். காந்திக்கு எழுதிய கடிதத்திலே இது பற்றியும் குறிப்பிட்டார்.

' எனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாக நடப்பது என்னை வருத்துகிறது. சுயராஜ்ய பவனம் அவரது நினைவுச் சின்னமாகும். மிகப் புனிதமானது அது என்று கருதுகிறேன். நூறு ரூபாய் பெரிதா ? அவரது நினைவு பெரிதா ?” -

கடிதம் கண்டார் காந்தி. ஜவஹருக்கு ஆறுதல் கூறும் முறையிலே மிக அழகானதொரு கடிதம் வரைந்தார். அந்தக் கடிதம் கிடைத்தது ஜவஹருக்கு. போலீஸ் வானும்’ வந்தது, அவரை அழைத்துச் செல்வதற்கு, இப்படியாக பத்து நாள் விடுதலைக்குப் பின் சிறை புகுந்தார் ஜவஹர்.

நாற்பத்தி ஏழாம் அத்தியாயம்

பம்பாய் காங்கிரஸ் மகாநாடு

1934 ஆண்டு அக்டோபர் மாதம். காங்கிரஸ் மகாசபை பம்பாய் நகரிலே கூடியது. பாபு இராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி காங்கிரஸிலிருந்து விலகினார்.

நவம்பர் மாதத்திலே மத்திய சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. 44 ஸ்தாபனங்களைக் கைப்பற்றியது. மாளவியா கோஷ்டியினர் 11 ஸ்தாபனங்களைக் கைப்பற்றினர்.

இந்த சமயத்திலே வெளியே இருக்க விரும்பினார் ஜவஹர். அரசாங்கம் தம்மை விடுவிக்கும் என்று