பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128

எண்ணினார். ஆனால் அரசாங்கம் என்ன கருதியது? வேறு விதமாகக் கருதியது.

  • தொடக்கத்திலேயே காங்கிரஸ்-க்குப் பெருமித வெற்றி கிடைக்குமானால் அது மிகுந்த அபாயத்தை விளைவிக்கும். காங்கிரசுக்கு பலம் பெருகாமல் செய்வதே நமது கொள்கை. அதனால் இந்த சமாதானப் பிரியர்களின் பேச்சுக்கு இணங்கி விடலாகாது. காங்கிரஸ்கார்களை நமது எதிரிகளாகவே கருத வேண்டும். எனவே சிறிது எட்டவைத்துக் கொள்வதே நல்லது. அதே சமயத்தில் காங்கிரஸ் எதிரிகளை நாம் ஆதரிக்க வேண்டும் ”

இவ்வாறு இரகசிய சுற்றறிக்கை அனுப்பியது டில்லி அரசாங்கம். அரசாங்கத்தின் கருத்து இப்படி இருக்கும் போது ஜவஹரை விடுவித்தால் என்ன நிகழும் ? காங்கிரசுக்கு பெரும் வெற்றியல்லவா. ஏற்பட்டுவிடும் ? எனவே ஜவஹரை அரசாங்கம் விடுவிக்கவில்லை. இதற்கு அறிகுறியாக இரண்டு சம்பவங்கள் நடந்தன.

சுபாஷ் போஸின் தந்தை எமனுடன் போராடிக் கொண்டிருந்தார். வெளி நாட்டிலிருந்த சுபாஷ் தந்தை அருகில் இருக்க விரும்பினார் ; தாய் நாடு திரும்பினார். பம்பாய் துறைமுகத்திலேயே அவரைக் கைது செய்துவிட்டது அரசாங்கம். எல்லைப்புற காந்தி அப்துல் கபார் கானையும் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டது.