பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

130

பதினாறு அடி அகலம், பத்து பதினைந்து ஜன்னல்கள். காற்று வீசினாலும் சரி, மழை பெய்தாலும் சரி, பஞ்சம் இல்லாமல் உள்ளே வரும். அதிகமாக வந்து தொந்தரவு கொடுத்தால் என்ன செய்வது ? பாதுகாப்புக்காகத் தட்டிகள் தொங்கும்.

இத்தகைய சிறைக் கூடத்திலே தான் ஜவஹர் இருந்தார். சில சிட்டுக் குருவிகளும் அவருக்குத் துணையாக இருந்தன, கூடு கட்டி வசித்தன.

அங்கிருந்து நோக்கினால் தொலைவிலே இமயமலையின் பனிச் சிகரங்கள் காட்சி தரும். கொஞ்சம் சமீபத்திலே தாழ்வான மலைச் சிகரங்கள் தோற்றமளிக்கும்.

இந்த மலைச் சிகரங்களிடம் மனம் பறி கொடுப்பார் ஜவஹர். ஆவலுடன் அவற்றை நோக்குவார் ; ஆனந்தம் கொள்வார், ஆகாயத்திலே சஞ்சரிக்கும் மேகக் கூட்டங்களை காண்பார்; களிப்பெய்துவார்.

இவ்விதமாக ஒரு மாதகாலம் சென்றது. கமலாவை காண்பதற்காக அழைத்துச் சென்றார்கள் அதிகாரிகள்.

போபாலிக்குச் சென்றார் ஜவஹர். கமலாவைக் கண்டார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு சிறைக்குத் திரும்பினார்.

கமலாவின் உடல்நிலை குணமடையவில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. எனவே அவரை ஐரோப்பாவுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள் டாக்டர்கள். மே மாதத்திலே ஐரோப்பாவுக்குப் புறப்பட்டார் &ID60s, அவரை வழியனுப்புவதற்காக ஜவஹரின் ஆன்னையும் சகோதரி கிருஷ்ணாவும் வந்திருந்தனர். ஆல்மோரா சிறையிலிருந்து ஜவஹரும் வந்திருந்தார். வருத்தத்தை விழுங்கிவிட்டு உதட்டிலே புன்முறுவலை வர வஆைக்கக் கொண்டனர்.