பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131

கமலாவை ஏற்றிக்கொண்டு வளைந்து வளைந்து சென்றது கார் அடிவாரத்தை நோக்கி. அதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஜவஹர், நீண்ட நேரம் நின்றார். பிறகு அன்னையிடமும் சகோதரியிடமும் விடை பெற்றுக் கொண்டார். போலீஸ் வானிலே ஏறினார்.

அப்போது அ வ ரு ைட ய முகம் துக்கத்தினால் களையிழந்து காணப்பட்டது. கண்கள் நீர் சொரியவில்லை. ஆனால் ஏக்கத்தைக் கொட்டின. மெதுவாக நடத்தார் ; சோர்வு அவரை ஆட்கொண்டது. திடீரென முதுமை தோற்றமளித்தார் ஜவஹர். கொஞ்ச நேரத்தில் அல்மோரா சிறைக்குள் வந்து சேர்ந்தார் அவர்.

அதன் பிறகு ? ......... வேதனை சொல்லொணாத வேதனை ஒவ்வொரு நிமிஷமும் வேதனை.

" எப்போது விடுதலை பெறுவோம்' என ஏங்கினார் ஜவஹர்.

ஆயிரத்து தொள்ளாயிரந்து முப்பத்தி ஐந்தாம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாலாம் தேதி திடீரென சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன. விடுதலை விடுதலை ஜவஹரும் விடுதலை. ஏன் ?

ஜெர்மனியிலே பேடன் வீலர் ஆரோக்கிய மாளிகையில் இருந்தார் கமலா. அவருடைய உடல் நிலை மிக மோசமாகி விட்டது. ஆபத்தான கட்டம். இந்நிலையிலாவது மனைவி அருகில் இருக்க வேண்டி ஜவஹரை விடுவித்தது அரசாங்கம்.

ஓடி வந்தார் ஜவஹர்.ஆனந்த பவன்த்துக்கு. வேண்டிய பொருள்களை எடுத்துக் கொண்டார். கராச்சிக்கு சென்றார். விமானம் ஏறினார். பாக்தாத், கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா முதலிய நகரங்கள் வழியாக ஜெர்மனி சேர்ந்தார். செப்டம்பர் மாதம் ஒன்பதசம் தேதி மனைவியை சந்தித்தார்.