பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

நாற்பத்தி ஒன்பதாம் அத்தியாயம் துணை இழந்த அன்றில் !

ஜவஹரைக் கண்டார் கமலா; முகம் மலர்ந்தார் ; மகிழ்ந்தார்; புன்முறுவல் பூத்தார்; வரவேற்றார்.

மனைவியின் அருகில் அமர்ந்தார் ஜவஹர்; ஆறுதலான மொழிகள் கூறினார் ; அன்புடன் பேசினார். மனைவியின் நிலை அவரது மனத்தைக் கலக்கியது ; குலுக்கியது ; வாட்டியது ; வருத்தியது.

“ இனி நீண்டநாள் உயிர் வாழ மாட்டார் கமலா. எந்த நேரத்திலும் அவர் இறந்து விடல் கூடும் ” என்று அறிந்தார்.

' இவ்வளவு நாள் பாரா முகமாய் இருந்து செய்ய வேண்டிய கடமையைச் செய்யாதிருந்து விட்டேனே ! “ என்று புலம்பினார்.

  • தவறு செய்து விட்டேனே ' என்று தவித்தாள்.

சென்ற காலத்திய தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்ய விரும்பினார். பன்மடங்கு அதிகமாக நேசிக்கத் தொடங்கினார்.

பேடன் வீலர் ஆரோக்கிய நிலையத்திற்கு நடந்தே செல்வார் ஜவஹர். மனைவியைக் காண்பார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார். பிறகு தமது இருக்கை திரும்புவார். மீண்டும் மாலையில் நடந்து செல்வார். மனைவி அருகில் அமர்ந்திருப்பார். ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துச் சொல்வார். கமலா கேட்பார்.