பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8

வானளாவிய மலைச் சிகரங்கள் அவரது உள்ளத்தைக் கவர்ந்தன. மலைச் சிகரம் ஒன்றன் மீது நண்பர்களுடன் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் ஒருவர் என்ன செய்தார் ? ஜவஹரைப் பிடித்துத் தள்ளிவிட்டார் : விளையாட்டாகத் தான். ஆனால் அந்த விளையாட்டின் வினை யாது? மலைச் சரிவிலே சறுக்கி வீழ்ந்தார் ஜவஹர். இன்னும் சில அடிகளே உருண்டு சென்றிருந்தால், என்ன ஆகியிருக்கும் ? செங்குத்தான பள்ளம். அதில் வீழ்ந்து இருப்பார். நல்ல காலம் எப்படியோ சமாளித்துக்கொண்டு எழுந்து விட்டார். உயிருக்கு வந்த ஆபத்து உடலியே சில காயங்களையே ஏற்படுத்தியது. பிழைத்தார் நேரு,

× 本 ×

இது மட்டுமா ? 1927 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரஸ்ஸல்ஸ் நகருலே நடந்தது அடிமைப்பட்ட நாடுகளின் மகாநாடு . அதில் இந்திய பிரதிநிதியாக கலந்துக் கொண்டார் ஜவஹர்.

இந்த மகாநாட்டில் ஒரு கூட்டம் பிரெஞ்சு நாட்டில் கோலோன் நகரில் நடந்தது இது முடிந்ததும் அடுத்த கூட்டம் டஸ்ஸல் டிரப் நகரில் நடந்தது. இங்கு அங்கத்தினர் அனைவரும் செல்லும்படி சொன்னதால் நேருவும் மற்றவரும் டஸ்ஸல் டிரப் சென்றனர். கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த அங்கத்தினர்களை போலீஸார் எதிர்கொண்டனர். ' பாஸ்போர்டை காட்டுங்கள்’’ என்றனர்.

நேருவிடம் பாஸ்போர்ட் இருந்ததா ? இல்லை. ஏன் ? கோலோன் நகரிலிருந்து புறப்பட்ட போது டஸ்ஸல்டிரப் நகரில் சில மணி நேரம் தானே தங்க போகிருேம் என நினைத்து தாம் தங்கியிருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார்.