பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

135

பிரயாணத் தேதியைத் தள்ளிப் போட்டார்.

பிப்ரவரி மாதம் 28-ந் தேதி விடியற்கால்ம், கமலாவின் மூச்சு சிறிது சிறிதாக நின்று கொண்டிருந்தது. ஜவஹரும் இந்திராவும் அருகில் இருந்தனர் ; கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

கமலா காலமானார்.

ஐம்பதாம் அத்தியாயம் அழைப்பும் மறுப்பும்

ஐரோப்பிய வானிலே யுத்த மேகங்கள் உலவின; இடித்தன; முழங்கின; எந்த நேரத்திலும் பெரும் போர் மூளும் என்ற பயத்தை எழுப்பின.

ஜெர்மனியிலே ஹிட்லரின் எழுச்சி! விார்சேல்ஸ் ஒப்பந்தம் காற்றில் பறக்க விடப்பட்டது. போர் முயற்சியில் ஈடுபட்டார் ஹிடலர்; சங்கநாதம் முழங்கினார்.

இத்தாலியிலே முசோலினி! வாத்து நடை பயின்றார்! போர் முரசு கொட்டினார்! அபிசீனியா மீது பாய்ந்தார்.

ஸ்பெயின் தேசத்திலே குடியரசுக்கு சோதனை: பாசிஸ்டு சக்திகள் ஜனநாயகத்துக்கு எதிராக அணிவகுத்து நின்றன.

ஜினிவாவிலே இருந்த சர்வ தேச சங்கம் குற்றுயிராய் கிடந்தது. எதுவும் செய்ய வல்லமையற்றதாய் விளங்கியது. பாசிஸ்டு வெறியர்களின் ஆட்டகாசத்தைக் கண்டிக்கவும் நடுங்கியது. -