பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

9

அவர் மட்டுமா 'பாஸ்போர்ட்” இல்லாதவர்? இவருடன் ஒரு ஆங்கிலேயேரும் அவர் தம் மனைவியும் இதே இக்கட்டில்

மாட்டிக்கொண்டனர்.

மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆல்ை, அதே நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் காவல் நிலைய அதிகாரி இவர்களை விடுதலைச் செய்தார். அந்த ஒரு மணி நேரத்திற்குள் தொலைபேசி மூலம் இவர்களைப் பற்றிய உண்மைகளை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டார் போலும் !

மூன்றாம் அத்தியாயம் பிற்காலத்திற்கு அஸ்திவாரம்

ஜவஹர் முதல் சில ஆண்டுகளிலே வீட்டிலேயே கல்வி பயின்ருர் அவரை உருவாக்கியவருள் முதன்மையானவர் பிரட்டினன்ட் T. புரூக்ஸ் என்பவர். இவர் பிரம்ம ஞான சபையைச் சேர்ந்தவர். ஜவஹருக்கு இலக்கியத்திலும் நுண்ணிய ஆராய்ச்சியிலும் சுவை ஏற்படுத்தியவர் இவரே.

அதே போல் அவருக்கு இந்தியிலும், வடமொழியிலும் பயிற்சியளித்தார் ஒரு வடமொழி மேதை. உபநிஷதங்களும் பகவத் கீதையும் அவருக்கு மிகவும் பிடித்தவை.

ருஷ்ய ஜப்பானிய போர் காலத்தில் அவர் நிறைய பத்திரிகைகளை வாங்கிப் படித்தார். அவர் மனத்தில் தேசீயம் வளர இதுவே வித்திட்டது எனலாம்.

தமது பதினான்காம் வயதில் இங்கிலாந்து சென்றார். தாயும், தந்தையும், சகோதரியும் உடன் சென்றனர். ஹாரோ பள்ளியில் சேர்ந்தார்.