பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144

சுபாஷ் போஸுக்கும் காந்திக்குமிடையே சமரசம் செய்ய முயன்றார் ஜவஹர்; முடியவில்லை. இரு தரப்பிலும் விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லை. சமரச பேச்சு முறிந்தது.

சீனாவுக்குச் சென்றார். ஜவஹர் சியாங்கே ஷேக்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நேரு அப்போது சீனாவில் சுங்கிங்கில் இருந்தார். அங்கிருந்த நாட்களில் ஐந்து முறை ஏர் ரைடு (Air Raid) விமான தாக்குதல் நடந்தது. அதன் விபரீதங்களை கண் கூடாகக் கண்டார் நேரு.

செப்டம்பர் மூன்றாம் தேதி. இரண்டாம் உலகப்போர் மூண்டது.

லார்டு லின்லித்கோ அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்தார். இரண்டாவது உலகப் போர் மூண்டவுடன், இந்தியாவும் பிரிட்டனுடன் சேர்ந்து ஜெர்மனியுடன் போர் செய்யும் என்று அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கையை விடுமுன் இந்தியத் தலைவர்களையும் சட்டசபை அங்கத்தினர்களையும் கலந்தாலோசிக்காமலே இந்தியாவை போரில் ஈடுபடுத்தினார். அறிக்கையில் என்ன கூறினார்? ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் காக்கவே இப்போர் என்றார்.

  • யாருடைய சுதந்திரத்திற்காக ?’ என்ற கேள்வியை எழுப்பினார் நேரு.

இது உலகெங்கும் எதிரொலித்தது. இந்தியா திரும்பினார் நேரு.

ဒွိႏိုင္ငံ