பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146

இராம்கர் என்ற இடத்தில் கூடிய காங்கிரஸ் சட்ட மறுப்பு இ ய க் க த் தை தொடர்ந்து நடத்துவதென்று தீர்மானித்தது.

அதன்படி ஒவ்வொரு இடத்திலும் இன்ன இன்ன தேதிகளில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி அக்டோபர் மாதம் 17ந் தேதி, வினோபா பாவே தனி நபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். வார்தாவுக்கு சிறிது தூரத்தில் ஓர் ஊரில் போர் எதிர்ப்பு பிரசாரம் செய்தார். நான்கு நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டார்.

ஜவஹர், முறையும் வரவிருந்தது நவம்பர் ஏழாம் தேதியன்று. ஆனால் அக்டோபர் மாதத்தின் கடைசி நாளன்று நேருவை சியோக்கி ரயில் நிலையத்தில் கைது செய்தது. அவர் காந்தியடிகளை அப்போது தான் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.

கோரக்பூரில் அவர் செய்த சொற்பொழிவுகள் அரசுக்கு எதிரானவை என்பதே குற்றச்சாட்டு.

கோரக்பூரில் நடந்த விசாரணையில் நேரு தனி நபரை அடக்கலாம்: அழிக்கலாம். ஆனால் பாரத மக்களை அழிக்க முடியாது. பாரத சக்தி என்றும் இருக்கும், என்றும் இளமையுடையது ஒரு நாளும் செயலற்று போய்விடாது ' என்று எச்சரித்தார்.

நேரு எட்டாவது முறையாக சிறையிலடைக்கப்பட்டார் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

ဒွိင္ငံ