பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148

ஆனால் காந்தியடிகள் தம் கொள்கையைச் சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை.

இரங்கூன் வீழ்ந்ததும் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் ஒரு அறிக்கை வெளியிட்டார். ஸ்ர் ஸ்டாபர்ட் கிரிப்ஸ் என்பவரை இந்தியாவுடன் சமரச ஒப்பந்தம் செய்ய அனுப்புவதாக வெளியிட்டார்.

அந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்டார் ஜவஹர். கிரிப்ஸ் சமரச பேச்சு காங்கிரஸ்-க்கு உகந்ததாக இல்லை. எனவே பேச்சு முறிந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேறியது. அது என்ன ? வரலாறு பிரசித்தி பெற்ற 'வெள்ளையனே வெளியேறு' என்பதே அது.

இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது. அகிம்சையில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் ஒரு தாளில் செய் இன்றேல் செத்து மடி!' என்ற வாக்கியத்தை எழுதி உடையில் குத்திக் கொண்டனர்.

இயக்கத்தின் வேகம் இங்கிலாந்தை உலுக்கியது. எனினும் அ .ெ ம. ரி க் க பிரஸிடெண்ட் ரூஸ்வெல்ட் இந்தியாவுக்குச் சாதகமாக பேசியதை, கேட்க மறுத்தது அரசு.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது. காந்தி, நேரு, காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரையெல்லாம் உடனுக்குடன் கைது செய்தது.

ஜவஹர் இம்முறை மிக நீண்ட கால சிறைவாசம் அனுபவித்தார். அவர் 1945 சூன் மாதம் 15ஆம் தேதி தான் விடுதலை பெற்றார். ஆமதாபாத் கோட்டை சிறையிலிருந்தனர் அனைவரும். இதுவே ஜவஹரின் ஒன்பதாவது சிறை வாசம் அதாவது 1041 நாட்கள் சிறைவாசம்.