பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

ஐம்பத்தி எட்டாம் அத்தியாயம் வாழ்க இந்தியா !

1946 ஜவஹரின் பாரத தரிசனம் புத்தக உருவில் வெளிவந்தது. மார்ச் மாதம் 17-ந் தேதி தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யப் புறப்பட்டார் நேரு.

வைசிராயை சந்தித்து, பிரிட்டிஷ் மந்திரி சபையின் திட்டம் பற்றிய தமது கருத்தை தெளிவு படுத்தினார்.

இதன் பயனாக இடைக்கால சர்க்கார் அமைக்க, ஆகஸ்டு 12-ந் தேதி ஒப்புக் கொண்டார்.

முஸ்லீம் லீக் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. எங்கும் கொலை கொள்ளை அராஜக செயல்கள் தாம் இடைக்கால சர்க்காருக்கு மறுப்பு தெரிவித்ததை மறந்தது. * தம்மை வேண்டுமென்றே நிராகரித்தது காங்கிரஸ் ’ என்று குற்றஞ் சாட்டியது. பாகிஸ்தான் இன்றேல் ஐக்கிய இந்தியா எங்கே?' என்று அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்தனர் ஆத்திரத்தில்.

டிசம்பர் 4-ந் தேதி நேரு இங்கிலாந்து சென்றார். பிரிட்டிஷ் மந்திரிகளைக் கண்டு பேசினார். இந்தியா திரும்பினார்.

இந்தியாவை துண்டாடக் கூடாது என்பது அண்ணலின் எண்ணம். மெளண்ட்பாட்டன் பிரபு காங்கிரஸ் , முஸ்லீம் லீக் இருவரும் ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

அன்று காந்தி அடிகளின் மெளன நாள். நேரு, சர்தார், இராஜாஜி ஆகியோர் வைசிராயைச் சந்தித்து இந்தியாவை துண்டாட ஒப்புக் கொண்டனர்.