பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசீய எழுத்தாளர் அமரர் சக்தி த சன் சுப்ரமணியனை அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1.9 34 - ஆம் ஆண் டு "சுதந்திரச் சங்கு' என்ற பத்திரிகையில் ஆரம்பித்த எழுத்துத் தொண்டு, அவர் தம் இறுதி காள் வரை தொடர்ந்தது. | நம் காட்டு சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு கொண்டவர். அண்ணல் காந்தி, ஆசிய ஜோதி, சர்தார் வல்லபாய் பட்டேல், நேதாஜி, இராஜன் பாபு ஆகிய பெருந் தலைவர்களுடன் 'நவ சக்தி'யின் ஆசிரியர் என்ற முறையில் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நேரிற் கண்டு, தம் பத்திரிகையில் விமர்சித்தவர். 1947 ஆம் ஆண்டு டில்லியிலேயே தங்கி, எல்லா கிகழ்ச்சிகளை கேரிற் கண்டு அலசி பார்த்தவர்.

இந்த நூலில், மனித குல மாணிக்கத்தின் வாழ்க்கை, கொள்கைகள் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டுகிறார். சோஷலிஸ்ட் நேருவின் வாழ்க்கைப் போராட்டத்தை நமக்கு சுவையாக விவரிக்கிறார்.

சிறந்த ஆராய்ச்சியாளராகிய அமரர் சக்திதாசன் சுப்ரமணியன் காற்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை தமிழ் இலக்கியத்திற்கு சமர்ப்பித்தவர். இத்தகைய சிறப்புடைய மூதறிஞர், இந்தியாவின் தலைமகன் நேருவைப் பற்றி எழுத தகுந்தவர் அன்றோ ?