பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஹாரோவை விட்டு ட்ரினிடி கல்லூரியில் சேர்ந்தார்.

அதன் பின் 1910 ஆண்டு கேம்பிரிட்ஜ் கல்லூரில் படிப்பு முடிந்தது. ஐ ஸி. எஸ். பரீட்சைக்கு செல்ல முதலில் விரும்பினார். பின்னர் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்தார்.

1912-ஆம் ஆண்டிலே பாரிஸ்டர் பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். இந்தியா திரும்பினார் அலகாபாத் நீதி மன்றத்திலே பாரிஸ்டராகத் தொழில் தொடங்கினார்.

நான்காம் அத்தியாயம்

அரசியல் வானிலே

1912ஆம் ஆண்டின் இறுதி. இந்திய அரசியல் வானம் மந்தமாயிருந்தது. திலகர் சிறை வைக்கப்பட்டிருந்தார். தீ வி ர வா தி கள் தலைவரின்றித் தத்தளித்துக்கொண்டு இருந்தார்கள். மிதவாதத் தலைவர்கள் மண்டோ மார்லி சீர்திருத்தத்தின் மூலம் கிடைத்த சில பதவி இன்பத்தில் மூழ்கியிருந்தார்கள்.

கடல் கடந்ந இந்தியர்களைப் பற்றி அங்குமிங்கும் சில குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. காங்கிரசில் மித வாதிகளே பலம் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் காங்கிரஸ் மகா சபையானது ஆண்டுக்கு ஒரு முறை கூடும் ; தீர்மானங்களை நிறைவேற்றும் அவ்வளவில் கடமை முடிந்தது என்று சும்மா இருந்து விடும்.

1912 ஆம் ஆண்டு கிறிஸ்தும ல பண்டிகையின்போது பங்கியூரிலே கூடியது காங்கிரஸ். அந்த காங்கிரசுக்கு ஒரு