பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஐந்தாம் அத்தியாயம் I 9 || 9

1919-ஆண்டு முதல் உலக மகா யுத்தம் முடிந்த சமயம். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை எதிர் நோக்கியிருந்தார்கள் இந்திய அரசியல் வாதிகள். அதே சமயத்தில் கிலாபத் பிரச்னையில் இந்திய முஸ்லீம்கள் சீறிக்கொண்டிருந்தார்கள்.

இந்த சமயத்திலே இந்திய அரசாங்கம் ஒரு சட்டம் நிறைவேற்றியது. ரெளலட் சட்டம் என்பது அதன் பெயர். இந்த சட்டம் மசோதாவாக வெளியிடப்பட்ட போதே இந்திய அரசியல்வாதிகள் இதைக் கண்டித்தார்கள். ஏன் ?

ரெளலட் மசோதாவின்படி யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யலாம். இப்படி கைது செய்யப்பட்டவருக்கு நியாயம் கோர, உரிமை மறுக்கப்பட்டது. சுருக்கமாக நியாயமற்ற முறையில் ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில் கூட மனித உரிமைகளை மறுத்து மக்களை கொடுமைப்படுத்த அரசாங்கத்திற்கு பிரத்யேக உரிமை இதன் மூலம் கொடுக்கப்பட்டது. இந்த மசோதா சட்டமாகிவிட்டால் அராஜகம் தலைவிரித்தாடும் : நீதி எங்கோ பயந்து பதுங்கிவிடும், நேர்மை ஒடுக்கி, அமுக்கி, ஒருங்கே, அழிக்கவும்படும். எனவே அரசியல்வாதிகள் எல்லோரும் இதை ஒருமுகமாக எதிர்த்தார்கள். ஆனால் இந்திய அரசாங்கம் என்ன செய்தது? விடாப்பிடியாக அதைச் சட்டமாகியது.

இனி என்ன செய்வது ? ரெளலட் சட்டத்தை எதிர்க்கவேண்டும். தீவிரமாக எதிர்த்தே திரவேண்டும். அதற்குக் கீழ்படிந்து நடக்கக் கூடாதென்று கூறினார்