பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15

இளைஞனுடைய துணிவு முதியவரை சற்று கலக்கியது. வேண்டாம் அப்பா, வேண்டாம் ! சேராதே ஜெயிலுக்குப் போகவேண்டிவரும் ’’.

' வந்தால் என்ன ? வரட்டுமே ! ஜெயிலுக்குப் போகிறேன் !’’

ஜெயிலுக்குப் போகிறாயா அப்பா ! என் செல்வமே! நீயா ஜெயிலுக்குப் போக நினைக்கிறாய் ? வேண்டாம் விட்டு விடு. அந்த எண்ணத்தை விட்டு விடு சத்தியாக்கிரகம் வேண்டாம் ; நீ ஜெயிலுக்குப் போகவும் வேண்டாம் ; நமது கெளரவம் என்ன ? நம் அந்தஸ்து என்ன ? நீ ஜெயிலுக்குப் போகிறதாவது? ' என்று நயமாகவும் பயமாகவும் கூறினார் மோதிலால் நேரு.

இந்த விவாதம் ஒரு நாள் நடந்ததா ? இரு நாட்கள் நடந்ததா? பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. குமுறினார் தந்தை மகனின் பிடிவாதத்தைப் பார்த்து. இறுதியாக,

சத்தியாக்கிரக சபாவில் நீ சேரக்கூடாது.”

சேருவேன் சேர்ந்தே தீருவேன் !’

விடமாட்டேன் ' முடியாது '

ஒரு நாள் மோதிலால் நேருவுக்கு கோபம் வந்துவிட்டது.

" போ போய் விடு இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை வீட்டை விட்டுப் போ! போ வெளியே! ' என்று கர்ஜித்தார்.

கோபத்தை கக்கிய பெரிய நேரு, எரிமலை குளிர்ந்தது போல், சட்டென் குளிர்ந்தார். இன்னும் என்ன செய்தார் ? இரவு முழுவதும் தரையிலே படுத்துத் துரங்கினார் ஓர் இரவா? சில இரவுகளா? அல்ல, அல்ல பல இரவுகள் ! எதற்காக ?