பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

மகன் ஜெயிலுக்குப் போனால் தரையிலே படுத்துத் துரங்கவேண்டி வருமே. அப்படி தூங்கினால் எப்படியிருக்குமோ. நமது செல்வக் குமாரன் எப்படி தூங்குவான் ? தூக்கம் தான் வருமா ? உடம்பு நோகுமே ! அது எப்படி யிருக்கும் என்று பார்ப்போம்! "

என்று சோதித்தறிய, பிள்ளைப் பாசத்தை என்றுமே வெளியே காட்டத பெரிய நேரு, தம்மை வாட்டி வதைத்துக் கொண்டார்.

ஏன் ? பாசம் தலை துரக்கியதால்.

ஏழாம் அத்தியாயம்

சத்தியாக்கிரக தினம்-படுகொலை

ஏப்ரல் ஆறாம் தேதி எப்போது வரும் என்றும் மக்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இளைஞர் செயல் புரிய துடிதுடித்துக் கொண்டியிருந்தனர்.

ஏப்ரல் ஆறு; பொழுது புலர்ந்தது. கடைகள் திறக்கப்படவில்லை. எங்குமே கடைகளெல்லாம் மூடியே கிடந்தன. ஒவ்வொரு நகரிலும் ஹர்த்தால் வெற்றி! பெரும் வெற்றி! பொது மக்களின் உற்சாகம் வெள்ள பெருக்கென ஒடியது.

பஞ்சாப் மாகாணத்திலே அமிர்தசரஸ் என்று ஒரு நகரம் அங்கும் ஹர்த்தால் மாபெரும் வெற்றி, கண்டது பஞ்சாப் மாகாண அரசாங்கம் கொண்டது நடுக்கம். எனவே அடக்கு முறை ஆட்சியை கவிழ்த்து விட்டனர் இருவர். ஒருவர் டாக்டர் சத்தியபால்.