பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17

மற்றொருவர் டாக்டர் கிச்லு.

ஏப்ரல் 10ந் தேதி இந்த இருவரையும் அரசாங்கம் கைது செய்தது. கண்காணாத பிரதேசத்துக்குக் கொண்டு போய் விட்டது. இந்தச் செய்தி ஊர் முழுவதும் காட்டுத் தியென பரவியது. கொதித்தெழுந்தனர் மக்கள். தலைவர்களை விடுதலை செய்வீர்” என்று முழங்கினர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஏப்ரல் 13ந் தேதி பெரியதொரு கண்டன கூட்டம், அரசாங்கத்தின் நியாயமற்ற செயலைக் கண்டிக்கக் கூடியது தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவிப்பதற்காக' கூடியது. உடன் அரசாங்கம் என்ன செய்தது ? தடை உத்தரவை பிறப்பித்தது. தடை உத்தரவைக் கண்டு மக்கள் அஞ்சுவரோ? இல்லை, இல்லை! ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர்.

ஊரின் நடுவே ஒரு மைதானம். ஜாலியன்வாலாபாக் என்பது அதன் பெயர். இந்த மைதானத்தைச் சுற்றி வீடுகள். மூன்று பக்கங்களிலும் மதில். உள்ளே செல்லவும், வெளியே வரவும் ஒரே வழி. அதுவும் சிறியதொரு வழி.

இங்கேதான் மக்கள் கூடியிருந்தார்கள். ஆயிரமா ? ஐயாயிரமா ? அல்ல ; இருபதினாயிரம். ஆம். இருபது ஆயிரம் மக்கள் !

இராணுவ வீரர் 150 பேர் துப்பாக்கிகளுடன் வந்தனர். ஜெனரல் டயர் அவர்களுக்குத் தலைவன். இருந்த ஒரே வழியை அடைத்துக் கொண்டனர்.

" போய் விடுங்கள் ! இல்லாவிட்டால் சு ட் டு த் தள்ளுவேன் ' என்று அச்சுறுத்தின்ை டயர்.

எங்கே போவது? எப்படி செல்வது? வழியில் அடைத்து நின்றதே இராணுவம் ! ஒன்று இரண்டு மூன்று ! நொடிகள் பறந்தன. அவ்வளவுதான்.

2