பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

ஒன்பதாம் அத்தியாயம்

தீமையால் நன்மையே துன்பத்தால் இன்ப:ே

இந்த உலகத்திலே நன்மையும் தீமையும் கலந்தே வருகின்றன. இன்பமும் துன்பமும் தொடர்ந்தே வருகின்றன.

முசோரி போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரை விரட்டியது மற்றொரு விதத்தில் நன்மையாகவே முடிந்தது.

ஜவஹர்லால் நேரு சீமானின் செல்வப் புதல்வர். எளிய வாழ்க்கை இன்னதென்றே அ றி யா த வர். ஆடம்பர வாழ்விலும் சுக போகங்களிலே ஊறியவர். பணக்கார சூழ்நிலையே அறிந்தவர்; வாழ்ந்தவர். மேற்கு நாட்டிலே படித்துப்பட்டம் பெற்றவர். மேற்கு நாட்டுக் கலாசாரத்துக்கு நெஞ்சைப் பறி கொடுத்தவர். இத்தகைய ஒருவர் உண்மை இந்தியாவைக் கானும் வாய்ப்பு அப்போது தான் ஏற்பட்டது. ஜில்லா போலிஸ் சூப்பிரண்டு முசோரியினின்றும் ஜவஹரை விரட்டியதும் நன்மைக்கே. அதாவது இந்திய நாட்டு விவசாயிகளின் பரிதாப நிலையை நேரில் காணும் வாய்ப்பைத் தந்தது.

>k >k >k

அந்தக் காலத்திலே விவசாயி என்று சொன்னால் கண் முன் தோன்றியவன் எவன்? ஏழைக் குடியானவனா? அல்ல. நிலத்திலே உழுது பயிர் செய்தவனா ? அல்ல, அல்ல! ஜமீன்தார்கள், பெரிய நிலச்சுவான்தார்கள், மிராசுதார்கள்; இவர்களே அக்கால விவசாயி எனப்பட்டோர். ஏழை உழவனைப் பற்றி எண்ணுவோர் எவருமிலர். நிலப்பிரச்னை என்று அவர்கள் பேசிய யாவும் இந்தப் பெரு நிலக்