பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

25

அழைப்பை ஏற்றுக் கொண்டு யமுனை ஆற்றின் கரைக்குச் சென்றார். அங்கிருந்த விவசாயிகளைக் கண்டார். அவர்கள் தோற்றம் அவர் உள்ளத்தைக் கவ் வியது ; விவசாயிகளின் துன்பக் கதைகள் அவரை உலுக்கின. தங்கள் கிராமங்களுக்கு வந்து எல்லாவற்றையும் நேரில் காணவேண்டும் என்று

மன்றாடினார்கள் விவசாயிகள். அவர்களது வேண்டு கோளுக்கு இணங்கினார் ஜவஹர். இரண்டு நாட்களுக்குப் பின் வருவதாகக் கூறினார். “சரி” என்று விவசாயிகளும்

திரும்பிச் சென்றார்கள்.

பாரத தரிசனம் இரண்டு நாட்களுக்குப்பின் நண்பர் சிலருடன் அந்த கிராமத்துக்குச் சென்றார் ஜவஹர். ஏழை விவசாயிகளின் வாழ்வை நேரில் கண்டார். அவர் தம் துன்பக் கதைகளைக் கேட்டார். ஜமீன்தார்கள், போலீஸ்காரர்கள், தாலுக்தார்களி புரியும் அட்டுழியங்களைக் கேட்டார்; ஏழ்மையின் கோரத் தாண்டவத்தைக் கண்டார்; வறுமை பாரதத்தை தரிசித்தாா, உடன் பிறவா வறுமை தெய்வங்களைக் கண்டார்; மனங் கனிந்தார்; உள்ளங் கரைந்தார்.

'ஆகா! இவ்வளவு நாள் என்ன காரியம் செய்தோம்? என்ன காரியம் செய்தோம்? இங்கே இந்த ஏழை மக்கள் வறுமையிலே வாடித் தவிக்கிறார்கள், நாமோ அலகாபாத்திலே ஆனந்த பவனத்திலே சுகபோகத்திலே கேளிக்கைகளிலே வாழ்நாளைக் கழிக்கிறோம். என்ன அநியாயம் ! என்ன அநியாயம்!” என்று துடித்தார்.

துக்கம் தொண்டையைக் கவ்வியது. வெட்கம் அவரை வ ட் டி ய து. 'பெருங்குற்றம் செய்து விட்டோம்” என வருந்தினார். புதியதோர் உணர்ச்சி புதியதோள் ஆவேசம் அவரை ஆட்கொண்டது. அவரது மினக் மாறியது. மாற்றம்! மாற்றம்! புரட்சிகரமான மாற்றம்.

'அன்று முதல் இந்தியா என்றால் கந்தல் உடுத்திய இந்திய பட்டினிப் பட்டாளம் தான் என் கண் முன் நிற்கத் தொடங்கின’

o சுயசரிதை-நேரு,