பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

இப்படி திடீரென வெள்ளையர் நடுங்குவானேன்? வெள்ளையருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உடனே கோட்டைக்குள் ஒடி ஒளிந்துக்கொள்ளும்படி அவசர செய்தி அனுப்பியதேன் ? அவசர உபயோகத்திற்கு அலகாபாத் கோட்டையை ஒழித்துத் தயாராக வைப்பானேன்?

இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் காரணம் பயம். திடீர் பயத்திற்குக் காரணம் ?

1857 ம் ஆண்டிலே நடந்ததல்லவா முதல் சுதந்திரப் போர் ? அது தொடங்கியதும் மே பத்தாம் நாள் தான். மீரட்டில் தான் தொடங்கியது. பழைய நினைவு, பயத்தைக் கிளறிவிட்டு இருந்தது.

அது மட்டுமா ? கூடவே சந்தேகம் வெள்னையரின் மனத்தைப் பிடித்து ஆட்டியது. அதே நாளை இப்போது கொண்டாட இந்தியர் முற்பட்டிருப்பதாகக் கருதியது 'சூடு பட்ட பூனை”. கலியாணம் என்ற காரணத்தைக் காட்டி எல்லாரும் திரண்டு வந்திருக்கின்றனர். இது சும்மா. உள் நோக்கம் வேறு. அது தான் புரட்சிக்குச் சதி ஆம் ; சதி திட்டம் தீட்டுகிறார்கள். இல்லாவிட்டால் மகாநாட்டை கூட்டுவார்களா? இப்படி எண்ணி எண்ணி, கலங்கி, திகில் பட்டது வெள்ளையர் கூட்டம்.

மோதிலால் நேரு அவர்களது அழைப்பிற்கிணங்கி அலகாபாத்துக்கு வந்தார் காந்திஜி. நீண்ட நேரம் பேசினார். சட்ட மறுப்புக் கொள்கையை விரிவாகக் கூறினார்.

பிறகு ஜவஹரிடமும் பேசினார். அவசரப்பட்டு ஏதும் செய்ய வேண்டாம் என்று இளைய நேருவுக்கு யோசனையும் கூறினார்.

இவையெல்லாம் வெள்ளையர் அறிவரோ ? அகிம்சா போதகர் காந்தியின் தலைமையில் அல்லவா தேசீயவாதிகள்