பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32

1922-ம் ஆண்டில் செளரி செளராவில் மக்கள் உணர்ச்கி வசப்பட்டு, அகிம்சையை மறந்து, கொடுரமாக காவல் நிலையங்களையும் காவல்காார்களையும் திக்கிரையாக்கினர்.

கண்டார் காந்தி; பர்தோலி ஒத்துமையைாமை இயக்கத்தை நடத்துவதில்லை என்று தீர்மானித்தார். திடிரென மார்ச் மாதம் மூன்றாம் தேதி இளைய தேரு விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைக்கு அரசு கூறிய காரணம்? அவர் தவறுதலாக கைது செய்யப்பட்டு விட்டாராம் ! எப்படி கதை :

சில நாட்கள் ஆனத்த பவனத்தில் தங்கிவிட்டு, மார்ச் 10ந் தேதி காந்திஜியின் ஆமதாபாத் ஆசிரமத்திற்குச் சென்றார். அடிகளை சந்தித்தாரா? இல்லை. அவர் அங்கு அடையுமுன்னரே காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சபர்மதி ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

>k >k xļr

நேரு தலைவரில்லா காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஒழுங்கு படுத்த நினைத்தார். அண்ணலின் நிர்மாண திட்டங்களில் கவனம் செலுத்தினார். அன்னிய நாட்டு துணிகள் பகிஷ்காரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பெரியதொரு பகிஷ்கார குழுவை தோற்றுவித்தார். அன்னிய துணிகள் வைத்திருந்த கடைக்காரர்களை அவைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று மறியல் செய்தார்.

அவ்வளவே ! தன் வியாபார சந்தையிலே மண்

விழுவதை கண்டது அரசு. எடுத்தது நடவடிக்கை. அது என்ன ?