பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

"நாங்கள் இங்கே போராட்டத்தில் கலந்துக் கொள்ள வரவில்லை. பார்த்து விட்டுப் போகவே வந்தோம், உடனே போய்விடவேண்டும் என்ருல் எப்படி போவது ? அடுத்த ரயில் எப்போது வருகிறதோ அப்போது போய்விடுகிருேம் அதுவரை இங்கே தான் இருப்போம் !" என்று பதில் அளித்தார் நேரு,

இது கேட்ட போலீஸ் அதிகாரிக்குப் பொறுக்கவில்லை. மூவரையும் கைது செய்தார். ஜெடோ நகரின் தெரு வழியே இம்மூவரையும் நடத்திச் சென்றார். எப்படி?

கையிலே விலங்கு. நேருவின் வலது கையுடன் சந்தானத்தின் இடது கையைப் பிணைத்து விலங்கு, அதைத் தொடர்ந்து நீண்டதொரு சங்கிலி, அந்த சங்கிலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னே சென்றான் ஒரு போலீஸ்காரன். அன்று இரவு முழுவதும் போலீஸ் லாக்கப்பில் இருந்தனர். அப்போதும் விலங்கை நீக்கவில்லை. படுப்பது எப்படி? தூங்குவது எவ்வாறு?

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு விசாரணை நாடகம் தெடங்கியது. இரண்டு வாரம் தொடர்ந்து நடந்தது இந்த போலி நாடகம், தண்டனை - உண்மையாக வழங்கப்பட்டது.

நாபா அதிகாரி மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தார். 'உங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து விட்டோம். இனி இந்த சமஸ்தானத்திற்குள் கால் வைக்கக் கூடாது. போங்கள் !' என்று கண்டிருந்தது அந்த உத்தரவில்.

மூவரையும் இரயில் நிலையத்திற்கு அழைத்துக்கொண்டு வந்து, ரயில் வண்டியில் ஏற்றி அனுப்பினார் போலீஸ்

அதிகாரி.