பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

இந்திய சமஸ்தானங்கள் எப்படிப்பட்டவை, அவற்றின் நிர்வாகம் எப்படி என்பதை ஒருவாறு அறிந்துக்கொண்டார். சமஸ்தானங்களை ஒழித்துவிட அன்றே உறுதி கொண்டார். அது 1948ஆம் ஆண்டிலே நிறைவேறியது.

அரச பிரமுகர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரிவி பர்ஸ்" என்ற தொகை அவர்தம் அருமை மகள் அன்னை இந்திரா நிறுத்தினார்.

ஒருங்கிணைந்த ஒரே பாரதம் ; குட்டி குட்டி அரச பொம்மைகளை ஒழித்தப்பின், ஏற்பட்டது.

பதினான்காம் அத்தியாயம்

" நீ பேசாமல் இரு ”

1924 ஆம் ஆண்டும், 1925 ஆம் ஆண்டிலும் காங்கிரசில் மக்கள் இயக்கம் என்று குறிப்பிடதக்கவை ஏதும் இல்லை.

ஜவஹர் 1926 ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுக் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

காங்கிரஸ் காரியதரிசிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்ற பேச்சு அப்போது எழுந்தது. ஜவஹர்லால் நேருவுக்கு இது விருப்பம்தான். உழைப்புக்கு ஊதியம் அளிக்காமல் எவருடைய உமைப்பையும் பெறலாகாது என்பது அவருடைய கருத்து. ஆனால் அந்த நாளிலே காங்கிரஸ் முதல்வர்களின் கருத்து வேறு விதமாக இருந்தது. பொது சேவைக்குப் பணம் வாங்குவதா ? கூடாது என்பது