பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

அவர்களுடைய கருத்து. அதை அகெளரமாகவும் கருதினார்கள்.

ஆனால் ஜவஹர் அப்படி நினைக்கவில்லை. சர்க்கார் உத்தியோகமும் பொது சேவை தானே !! பொது மக்களின் வரிப் பணத்திலிருந்து தானே சர்க்கார் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதை மாத்திரம் வாங்கலாமா? ஆகவே, இதில் கெளரவமும் இல்லை, அகெளரவமும் இல்லை. இது ஜவஹரின் கருத்து. எனவே சம்பளம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார். ஜவஹருக்கு உதவியாக இன்னொரு காரியதரிசி இருந்தார். அவருக்குப் பணத் தேவை அதிகம். இருந்தாலும் கெளரவம் கருதி அவர் சம்பளம் பெற்றுக்கொள்ள மறுத்தார். எனவே ஜவஹருக்கும் சம்பளம் கிடைப்பது நின்று போயிற்று.

சம்பளம் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் சேவை செய்வதை பெரிய நேரு விரும்பவில்லை ; எதிர்த்தார்.

ஜவஹருக்கோ வருமானம் எதுவுமில்லை. சொந்த செலவுக்காக அப்பாவை எதிர்பார்த்திருப்பது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகள் அவருக்கு ஏதாவது கெளரவ பதவி கொடுத்துச் செலவுக்கு வேண்டிய பணமும் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ஜவஹருக்கு அதுவும் பிடிக்கவில்லை.

“என்னைக் காட்டி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கவே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். எனவே அது வேண்டாம்' என்று தீர்மானித்து விட்டார்.

மிகவும் தர்மசங்கடமான நிலைமை. இதை அப்பாவிடம் எப்படி சொல்வது? அவர் மனம் புண்பட்டுவிடுமே!’ என தயங்கினார். இப்படி பல நாள் யோசித்தார். ஒரு நாள் மெதுவாக அப்பாவிடம் பேச்சுத் தொடங்கினார்.

5