பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

பதினைந்தாம் அத்தியாயம் மாட்டு வண்டியாம் மாட்டு வண்டி

மகனை கண்ணிமைப் போல் காத்து பேணி வந்த பெரிய

நேருவுக்கு, மனவருத்தமும் தந்தது ஜவஹரின் செயல். அது என்ன ? -

விவசாயிகளுடன் தொடர்பு கொண்ட காலம் முதல் ஜவஹரின் மனப்பான்மை ஒரேயடியாக மாறிவிட்டது. புரட்சிகரமான மனப்பான்மை.

விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை விட்டு விட்டார். ஏழை எளியவர் போலவே உடுத்தத் தொடங்கினார். ஏழை மக்களுடன் கலந்து நெருங்கி உறவு கொண்டார். அவர்கள் நடுவே அமர்ந்து அவர்கள் கொடுக்கும் எளிய உணவை வாங்கி ஆனந்தமாக உண்பார். அவர்களது இன்ப துன்பங்களைக் கேட்டு விவாதிப்பார். அவர் தம் வீடுகளுக்கு அடிக்கடி செல்வார்.

தமது செல்வ மைந்தன் சுகபோகங்களைத் துறந்து ஏழைகளுடன் பழகி வருவது பெரிய நேருவுக்கு வருத்தம் தந்தது. எனினும் மகனின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சியாகக் கருதி பேசாது இருந்தார்.

வண்டி ஒன்று வைத்து இருந்தார் ஜவஹர். மாட்டு வண்டி, அதிலே ஏறிக் கொள்வார். போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் செல்வார். ஏழை விவசாயிகளைப் போலவே தாமும் வாழவேண்டும் என்ற எண்னத்தினால் இவ்வாறு செய்தார். பெரிய நேருவுக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை.

ஒரு நாள் மாலை பெரிய நேரு தோட்டத்திலே நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இன்னும்