பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

4?

பேரன்பு அவ்வாறு மெளனமாக இருக்கத் தூண்டியது, வேற்றுமைகளை கரைத்தது.

இந்த கருத்து வேற்றுமை எப்போது தலை தூக்கியது ? 1927-ம் ஆண்டிலே ஐரோப்பாவுக்கு ஜவஹர் போய் வந்த பின்னர், கருத்து வேற்றுமை ஏன் ? எதை ஒட்டி எழுந்தது? காங்கிரசின் லட்சியம் பற்றி.

காங்கிரசின் லட்சியம் என்ன ? சுய ஆட்சி என்றனர் சிலர். டொமினியன் அந்தஸ்து என்றனர் மற்றும் சிலர். சுயராஜ்யமே காங்கிரசின் லட்சியம் என்றார். காந்தி.

மிதவாதிகளின் ஆதிக்கம் உச்ச நிலையில் இருந்தபோது காங்கிரசின் லட்சியம் சுய ஆட்சி ; அதாவது வெள்ளைக்கார கவர்னர் ஜெனரல் தலைமையில் இந்தியர்கள் இந்த நாட்டை ஆள்வது. இது கிடைத்தாலே போதும் ; இந்த குறிக்கோளே மிதவாதிகளின் லட்சியம்.

சுயராஜ்யம் என்றால் என்ன ? டொமினியன் அந்தஸ்து கிடைத்தலே, அதுவும் சுயராஜ்யம் தான் என்பது காந்தியின் கட்சி.

இதுவே ரொம்ப மிதமிஞ்சிய கோரிக்கை - என்பது

மிதவாதிகள் எண்ணம்; இந்த எண்ணமே பிற்போக்கானது

என்று வாதித்தனர் தீவிரவாதிகள் : தீவிரவாதிகளான இளைஞர்கள்.

"பூர்ண சுதந்திரமே எங்கள் லட்சியம்' என்று கர்ஜித்தது இளஞ்சிங்கம் ஜவஹர்.

1927 ஆம் வருடம் இறுதியிலே காங்கிரஸ் மகாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மகாநாட்டுக்கு வந்து சேர்ந்தார் ஜவஹர். எங்கிருந்து ? வெளிநாட்டு பிரயாணத்திலிருந்து.