பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

சட்டசபையிலே அலுப்புத் தட்டிவிட்டது. மோதிலால் நேருவுக்கு அதிலே உற்சாகமே இல்லை. சட்டசபையிலே என்ன செய்ய முடிகிறது ? சர்க்கார் கொண்டு வருகிற திட்டங்களை முறியடிக்கலாம் ; எ தி ர் த் து ஒட்டு அளிக்கலாம். '

இதை ஒரு முறை செய்யலாம் ; இரு முறை செய்யலாம். அதன் பிறகு ? சாரமற்ற காரியமாகவல்லவா போய்விடுகிறது ?"

இப்படி கூறத் தொடங்கினார் பெரிய நேரு.

இதே சமயம் நாட்டிலே முற்போக்கு சக்திகள் மிடுக்காக வளர்ந்தன. அமைதியான செயல்களைக் கண்டு துடித்தன ; பொறுமை இழந்தன.

தொழிலாளர்கள் ஸ் த ா ப ன ரீதியாக திரண்டு எழுந்தார்கள். பம்பாயில் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஒரு இலட்சம் பேர் என்றால் சாமான்யமா ? அதுவும் ஆறு மாத காலம் நிறுத்தத்தை நடத்தினர் என்றால் அவர்தம் நெஞ்சுறுதியை ஏற்காமல் இருக்க முடியுமா ? வங்கத்திலே இதே வேலை நிறுத்தம் எதிரொலித்தது. இங்கும் இலட்சக் கணக்கான சணல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தென் இந்திய ரயில்வே தொழிலாளரும் வேலை நிறுததம் செய்தனர். இப்படியாக உறுமி எழுந்தது, தொழிலாளர் சக்தி,

தொழிலாளர் எழுச்சி, பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கலக்கியது ; நடுக்குற செய்தது. இந்த இயக்கத்தை உடனே நசுக்க வேண்டும் ' என்று கருதியது. ஆபத்தை வளர விடுவது அசட்டுத் தனம் என கருதியது. தொழிலாளர் இயக்கத்தை பழி வாங்கச் சதி செய்தது. தொழிலாளர் தலைவர்களை சிறையில் தள்ளியது. வழக்கும் ஜோடிததது.

7