பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

63

சட்டியில் இட்டு, தண்ணீரை ஊற்றினர். நடுத்தெருவிலே அடுப்பை வைத்துத் தீ மூட்டினர். உப்பை காய்ச்சினர். ஆனால் எங்கும் அகிம்சை, கட்டுபாடு இரண்டும் அனுஷ்டிக்கப்பட்டன. எவ்வளவு ஆத்திர மூட்டிய போதிலும், கட்டுப்பாட்டை மீறவேயில்லை. -

எல்லைப்புற மாகாணம் பட்டாணியர் நிறைந்தது. வீரத்தின் இருப்பிடம்; தீரத்தின் உறைவிடம்; அஞ்சாமை வாழுமிடம் ; போர் என்றால் உடல் பூரிக்கும் இடம் : அஹிம்சையே அறியாத இடம்.

அந்தப் பகுதி சுடர் விட்டு எரிய தொடங்கியது.

குதாய் கித்மத்கார் ள்ன்ற செஞ்சட்டைப் படை தயாராயிற்று. அணி வகுத்து நின்றது. அகிம்சை போருக்குப் புறப்பட்டு விட்டது. யார் தலைமையில் ? எல்லைப்புற காந்தி தலைமையில்.

ஏப்ரல் மாதம் 23ந் தேதி பிஷாவார் நகரில் மிக அமைதியாகச் சென்றது காங்கிரஸ் தொண்டர் படை. அது ஒரு காங்கிரஸ் தொண்டர் ஊர்வலம்.

அதன் மீது இராணுவத்நை ஏவியது பிரிட்டிஷ் அரசாங்கம். சுடு ' என்று கட்டளையிட்டது. இராணுவ வீரர்கள் என்ன செய்தார்கள் ? சுடவில்லை ! கட்டளையைச் சட்டை செய்யவில்லை.

மீண்டும் சுடு என்ற உத்தரவு மிகவும் கண்டிப்பாக பிறந்தது.

துப்பாக்கிகள் உயர்ந்து நின்றனவா ? குண்டுகள் பாயாதனவா ? இல்லை, இல்லை இராணுவ வீரர்கள் சுட மறுத்து விட்டார்கள்.

அந்த தீர இராணுவ வீரர்கள் கார்வாலி இரஜிமெண்டை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்துக்கள்.