பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம்

ஜவஹர்லால் நேரு - ஆசிய ஜோ தி : ம னி த குல மாணிக்கம்; இத்தகைய ஒருவர் - எவ்வாறு தம் சொந்த முயற்சியால், போராடி, புரட்சி செய்து, வெற்றி வீரராக அனைவரின் புகழுக்கும் பாத்திரமானர் என்பதே ஒரு பெரிய கதை.

செல்வந்தர், பெரிய வழக்கறிஞர், மோதிலால் நேருவின் ஒரே மகனாய் பிறந்தார் . நன்னா ’. இவரே ஜவஹர்லால். கூட்டு குடும்பத்தில் பெரியப்பா மகன்கள் பலருண்டு. ஆனால் நேரு அனைவருக்குமே இளையவர். மூத்தவருடன் பழக முடியாத வயது இடைவெளி, எனவே அவர் அனுபவித்தது தனிமை, தனிமை, தனிமை ! !

இந்த தனிமை ஏழாண்டுகளுக்கு பின் அகன்றது. எப்படி? அவர்தம் அருமைத் தங்கை விஜயலகஷ்மியின் பிறப்பால். பின்னர் பல ஆண்டுகள் இடைவெளிக்கும் பின் பிறந்தார் இளைய தங்கை, கிருஷ்ணா.

செல்வ குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு - நேரு. இளைய வயதில் அவர் மனத்தில் தாய் ஸ்வரூபா ராணியும், பெரிய தாயாரும் சொல்லிய இராமாயன, மஹாபாரதக் கதைகள் ஆழ பதிந்தன.

முறுக்கு மீசை பரந்த நெற்றி, அறிவு சுடர் விடும் முகம்: தீர்மையான நாசி; தீர்க்கமான முடிவுக்கு எடுத்துக்காட்டான முகவாய்; எடுத்த காரியத்தில் வெற்றிக் கொடி நாட்டும் உதடுகள்; நல்ல திடகாத்திரமாக காட்சியளித்த இவரே மோதிலால் - நேருவின் தந்தை. தாய் ஸ்வரூபா ராணி -