பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

63

இருந்தது. பல தொண்டர்களையும் தலைவர்களையும் சிறைக்குள் தள்ளியது. ஆந்த ஆண்டு இறுதிக்குள் அகில இந்தியாவிலுமாக ஒரு லட்சம் பேரை சிறைக்குள் தள்ளிவிட்டது.

நைனியிலே சிறைக் கம்பிகளுக்கு பின்னே இருந்த ஜவஹர் இந்த செய்திகளையெல்லாம் அறிந்தார்; மகிழ்ந்தார்; மனம் பூரித்தார், பெருமை கொண்டார்.

சிறையிலே ஜவஹர் இருந்த இடத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? “ குத்தா கர்.” குத்தா என்றால் ஹிந்தியில் நாய், கர் என்றால் வீடு.

" சிறையிலே எனக்கு என்ன கஷ்டம்? ஒன்று மில்லையே. நான் செளகரியமாக இருக்கிறேன். ஆனால் எனது நாட்டு மக்களோ துப்பாக்கிக்கு இரையாகிறார்கள்; குண்டாந் தடியடி படுகிறார்கள். இப்படி நான் மட்டும் சுகமாக வாழ்வது முறையாகுமா?' என வருந்தினார் அவர்.

இரவு நேரத்திலே படுத்த வண்ணம் வானத்தைப் பார்த்துக் கொண்டே சிந்திப்பார். உறுதி கொள்வார்.

“எனது உடலை வருத்துவேன். ஏதாவது செய்வேன்."

சி ைற யி லே என்ன செய்ய முடியும் ? சிறை அதிகாரிகளைக் கேட்டு ஒரு தறி வாங்கினார். தினமும் நெய்தார்.

தினந்தோறும் விடியற்காலை எழுந்திருப்பார். இரண்டு மணி நேரம் நூல் நூற்பார். இரண்டு மணி நேரம் தறி வேலைச் செய்வார். தமது அறையைச் சுத்தம் செய்வார். தமது வேட்டியை தாமே துவைப்பார். பிறகு ஏதாவது பத்திரிகை படிப்பார்.

இது தான் சிறை வாழ்க்கை.

8