பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

69

இம்முயற்சியைப் பெரிதும் வரவேற்றார் இர்வின். லண்டனில் நடைபெற இருந்தது வட்டமேஜை மகாநாடு. அதிலே காங்கிரஸ் கலந்துகொள்ள வேண்டும் என்பது இர்வினின் விருப்பம்.

இந்த விருப்பத்தின் அடிப்படையில் எழுந்தது சமாதான எண்ணம். எனவே சமாதான தூதர் இருவரும் எரவாடா சிறைக்கு விரைந்து சென்றனர், காந்தியை கண்டு பேச. சிறையிலே காந்தியைக் கண்டனர், பேசினர்; லார்டு இர்வினின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

காந்தி என்ன சொன்னார் ? " நான் என்ன சமரசம் வேண்டாம் என்றா சொன்னேன் ? இல்லையே! சமரசமாக நடந்துகொள்ளவே விரும்பினேன். அதற்கு இணங்கவில்லை; சண்டை ஏற்பட்டது. எனது 11 பாயிண்டுகளுக்கு வைசிராய் இணங்கவேண்டும். டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் நான் சத்தியாகிரகத்தை நிறுத்துவேன். லண்டன் வட்டமேஜையிலும் கலந்து கொள்ளக்கூடும் என்பது என் கருத்து. ஆனால் காங்கிரஸ் தலைவர் ஜவஹர். அவர் என்ன சொல்கிறாரோ அதுவே முடிவாகும்.'

இதைக் கேட்டனர் சமாதான பிரியர்.

" அப்படியானால் சரி; நேருவையும் போய் பார்க்கிறோம் உங்கள் கருத்தை எழுதிக் கொடுங்கள் என்றனர்."

காந்தி நேருவுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள் சமாதான தூதர்கள்.

ஜூலை மாதம் 27ந் தேதி சமாதான தூதர் இருவரும் நைனி சிறைக்குச் சென்றனர். பெரிய நேருவையும், இளைய நேருவையும் கண்டனர்; காந்தியின் கடிதத்தைக் கொடுத்தனர். பேசினர்; இரண்டு நாட்கள் பேசினர்.