பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72

' காந்தியுடன் வேறு யார் இருக்கிறார் ?' இது மோதிலால் நேருவின் கேள்வி.

" சப்ருஜி இருக்கிறார். ஜெயகர்ஜி இருக்கிறார் : இது தான் கிடைத்த பதில்.

" அப்படியா ? நாங்கள் வரமாட்டோம்.'

" கோபித்துக் கொள்ளக்கூடாது. என்ன வேண்டும் என்று சொல்லுங்கள். செய்கிறோம் ' என்றார் ஜெயிலர்.

" முதலில் அந்த இருவரையும் வெளியே இருக்கச் சொல்லுங்கள். காந்தியுடன் நாங்கள் தனியே பேசவேண்டும்!” என்றார் மோதிலால்.

சிறை அதிகாரி ஓடினார் சமாதானத் தூதர்களிடம்:

விஷயத்தை தெரிவித்தார். சரி அழைத்து வாருங்கள்!”

என்று கூறினார்கள் அவர்கள். வெளி வந்து உட்கார்ந்து விட்டார்கள் சப்ருவும் ஜெயகரும்.

பெரிய நேருவும் இளைய நேருவும் வந்தார்கள். காந்தியுடன் கலந்தலோசித்தனர் பிறகு சமாதானத் தூதர் இருவரையும் உள்ளே அழைத்தார்கள்.

விவாதம் நடந்தது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்தது. முடிவு? ஒன்றுமில்லை! காங்கிரஸ் கோரிக்கைக்கு இர்வின் இணங்கவில்லை. பேச்சு வார்த்தை முறிந்தது.

பெரிய நேருவும், இளைய நேருவும் திரும்பினர் நைனி சிறைக்கு மீண்டும். மோதிலால் நேருவின் உடல் நிலை கெட்டது. எனவே செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி அவரை விடுவித்தது அரசாங்கம்.

அக்டோபர் மாதம் 11ம் தேதி இளைய நேருவும் விடுதலை பெற்றார்.