பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

கமலா மாத்திரம் வீடு திரும்பினார். வீட்டிலே பெரிய நேரு இருந்தார்.

"ஜவஹர் எங்கே அம்மா?' என்றார் மருமகளிடம்.

'ஜெயில் ஒரே வார்த்தையில் சுருக்கமாக வந்தது பதில்

'சுருக் கென்று பாய்ந்தது அந்தச் சொல். அப்படியே படுக்கையில் சாய்ந்தார் பெரியவர். குண்டு பட்டு விழுந்த கிழச் சிங்கம் போல் தவித்தார்; துடித்தார்; கண்ணிர் வடித்தார்.

இருபத்தாறாம் அத்தியாயம்

ண்டனையா ? பார்த் த o

விடுகிறேன் ஒரு கை;

இரண்டு வருடம் கடுங்காவல், எழு நூறு ருபாய் அபராதம்; அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஐந்து மாதம் கடுங்காவல். இதுதான் இம் முறை ஜவஹருக்கு விதிக்கப்பட்ட தண்டனை.

அபராதம் சட்ட மறுத்தார் ஜவஹர். தண்டனையை

ஏற்றார். சிறை புகுந்தார். ஐந்தாவது முறையாக அவருக்குச் சிறைவாசம்.

மகன் சிறை சென்றது கண்டு மனம் கொதித்தார் மோதிலால் நேரு, அடிப்பட்ட கிழச்சிங்கம் போல கர்ஜித்தார். 'தண்டனையா பார்த்து விடுகிறேன். இந்த அரசாங்கத்தை ஒரு கை ! இனி நான் சும்மா இருக்கப் போவதில்லை. எனக்கு வியாதியுமில்லை; ஒன்றுமில்லை; என் உடம்பு