பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

80

இவ்வளவு பேரும் கூடி பேசினார்கள். பேசினால் போதுமா ? இந்தியாவின் சார்பில் பேசக் கூடிய ஒரே கட்சி காங்கிரஸ். வட்ட மேஜை மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் யாருமே கலந்துக் கொள்ளவேயில்லையே? நாட்டின் நலத்தை, தேவையை மற்றவர் பேசினால், பூர்ணமானதாக இருக்குமா?

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மாக்டனால்டு இதைக் கண்டார். மகாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பினார். சட்ட மறுப்புப்போரை காங்கிரஸ் இதை அறிந்தால் நிறுத்தி விடும் என்று எதிர்பார்த்தார். எனவே அதற்கான சூழ்நிலையை உருவாக்க முனைந்தார்.

1931வது ஆண்டு ஜனவரி மாதம் 26ந் தேதி காங்கிரஸ் தலைவர் பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ஜவஹரும் சிறையிலிருந்து வெளி வந்தார்.

இருபத்தி எட்டாம் அத்தியாயம்

பெரிய நேருவின் வருத்தம்

"பெரிய நேருவின் உடல்நிலை கவலை தரும் நிலையிலிருக்கிறது” என்ற செய்தி கேட்டார் ஜவஹர். உடனே அலகாபாத் ஒடினார். ஆனந்தபவனத்துள் நுழைந்தார். அங்கு என்ன கண்டார்? தந்தையை படுக்கையில் கண்டார்; மனம் பதைத்தார். சில நொடிகள் அப்படியே திகைத்து நின்றார். பிறகு ஓடினார் தந்தை அருகே.

"அப்பா” என்று அழைத்தார். தந்தையைக் கட்டிக் கொண்டார். கண்ணிர் சொரிந்தார்.