பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81

அருமை மகனைக் கண்டார். பெரிய நேரு, அப்படியே அனைத்துக் கொண்டார். நீண்ட நேரம் தந்தையின் பிடியிலேயே இருந்தார் நேரு பின்னர் ஒருவாறு விடுவித்துக் கொண்டார்.

சிறையிலிருந்து வெளிவந்த உடனே காந்தியும் அலகாபாத்துக்குப் புறப்பட்டார். அன்றிரவே அலகாபாத் வந்து சேர்ந்தார்.

இரவு முழுவதும் துரங்கவே இல்லை; பெரிய நேரு விழித்துக்கொண்டே வழி பார்த்திருந்தார். யாருக்காக ? காந்திக்காக . அண்ணலை வரவேற்பதற்காக.

காந்தி வந்தார். பெரிய நேருவைப் பார்த்தார். சில நிமிடங்கள் வரை மெளனம்; பேச்சே இல்லை. அப்படியே வைத்த விழி வாங்காமல் பெரிய நேருவை பார்த்துக் கொண்டிருத்தார்.

"சுயராஜ்யம் பெறப்போகிறோம். நீங்கள் இந்தக் கண்டத்திலிருந்து பிழைத்து விட்டால் அதைப் பார்க்கப் போகிறீர்கள்’ என்றார் காந்தியடிகள்.

‘சுயராஜ்யம் வரப்போவது நிச்சயம். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ஆனால் நான் அதுவரை இருக்க மாட்டேன். சீக்கிரம் போய்விடுவேன்' என்றார் பெரிய நேரு

"ஆனால் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். சுதந்திர இந்தியாவில் நாம் சாகவில்லையே என்ற ருைத்தம் ஒன்று தான். வேறு ஒன்றுமில்லை! என்றார்.

காங்கிரஸ் தலைவர் பலரும் அலகாபாத்தில் கூடி விட்டனர். மோதிலால் நேருவின் மாளிகையில் ஒரே கூட்டம். நண்பர்களும் உறவினர்களும் கூடியிருந்தார்கள்.

10