பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

இருபத்தி ஒன்பதாம் அத்தியாயம்

முதல் வட்டமேஜை மகாநாட்டுக்குப் பின்

லண்டன் வட்டமேஜை மகாநாட்டுக்குச் சென்ற இந்திய மிதவாதத் தலைவர்கள் மூவர். ஒருவர் ஸர், தேஜ் பகதூர் சப்ரு, இன்னொருவர் ஜயகர்; மற்றொருவர் மகாகனம் பூரீனிவாச சாஸ்திரியர். மகாநாடு முடிந்தது. மூவரும் இந்தியா திரும்பினர். பம்பாய் துறைமுகத்திலே வந்து இறங்கினர்.

அவர்கள் கண்ட்தென்ன ? பம்பாய் நகரமே துயரில் மூழ்கியிருந்தது கண்டனர்.

ஏன் ? அன்றே மோதிலால் நேரு அமரரான நாள். பெரிய நேரு இவ்வுட லை விடுத்த நாள்; பண்டிதரை ஊனக் கண்கள் பறிகொடுத்த நாள்.

கண்ணிர் வடித்தது பம்பாய்; எங்கும் சோகம்; சோகம்; சோகம்! கடைகள் மூடிக் கிடந்தன.

மிதவாதத் தலைவர்கள் மூவரும் அலகாபாத்துக்கு விரைந்தார்கள்; இளைய நேருவைக் கண்டார்கள். கட்டி அணைத்தார்கள்; கண்ணிர் சொரிந்தார்கள். பிறகு ?

லண்டன் வட்டமேஜை மகாநாட்டிலே நடந்தவற்றை எல்லாம் கூறினார்கள்; ச ண் ைட ைய நிறுத்தச் சொன்னார்கள். சமரசம் பேசச் சொன்னார்கள், இர்வினைப் பார்க்கச் சொன்னார்கள். கடிதம் எழுதி, இரண்டாவது வட்டமேஜை ம க | ந ட் டி லே கலந்து கொள்ளச் சொன்னார்கள்,