பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் அத்தியாயம் சோஷலிச குருத்து ஜவஹர்

ஜவஹருடன் கூடவே பிறந்தது சோஷலிசக் கருத்துக்கள் எனலாம். பெரிய சீமானின் மகனல்லவா ? மிக மிக அமர்க்களமாக கொண்டாடப்படும் நவம்பர் பதினான்காம் தேதி நேருவின் பிறந்த தினம்.

அன்று காலை அவரை தராசில் ஒரு தட்டில் நிறுத்துவர். மற்றொரு தட்டில் அவர் எடைக்கு ஏற்றபடி கோதுமை தானியத்தை கொட்டி நிறுத்துவர். பின் அதை குழந்தை நேரு அங்கு வரும் ஏழை எளியவர்க்கு அள்ளி அள்ளி கொடுப்பான். இதில் அவனுக்கு பெரு மகிழ்ச்சி.

புத்தாடை உடுத்தும்போது இல்லாத மகிழ்ச்சி இனிப்புகளை பலருடன் பகிர்ந்து உண்ணும்போது ஏற்பட்டது. அடிக்கடி பிறந்த நாள் வராதா, அனைவருக்கும் இப்படி வாரி வாரி வழங்கலாமே! என்று:ஏங்குவான்.

>k >k 》

தம் ஆறாம் வயதினிலே ஒரு நாள். தம் தந்தையின் அறைக்குள் சென்றார், இளைய நேரு. தந்தை எங்கோ வெளியே போயிருந்தார். மேஜை மீது பார்த்தார். இரண்டு அழகிய பேனாக்கள். அப்பாவுக்கு ஒன்று போதாதோ ? இரண்டாவது எதற்கு ? என்று எண்ணியது சோஷலிஸ்ட் சிறுவனின் மனம். அவ்வளவு தான். ஒரு பேனா ஜவஹரின் பைக்குள் மறைந்தது. அவர் தம் அறைக்கும் சென்று விட்டது.